செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (12:26 IST)

நீ கிறிஸ்டியனா..? மகாபாரதம் பத்தி ஏன் பேசுற? – செய்தியாளர் சந்திப்பில் எச்.ராஜா ஆவேசம்!

H Raja
செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பத்திரிக்கையாளரை பார்த்து ‘நீ கிறிஸ்டியனா?” என கேட்டு பாதியில் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் சூழலில் அடிக்கடி தனது பேச்சால் சர்ச்சையை சந்தித்து ட்ரெண்டிங்கில் இருந்து வருபவர் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. நேற்று பாஜக கட்சியின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் மாநில செயற்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர் பத்திரிக்கையாளர்கள் புனைவுக் கதைகளை நம்புவதாக கூற, அதற்கு ஒரு பத்திரிக்கையாளர் “மகாபாரதம் மாதிரியா?” என கேட்டதால் பரபரப்பு எழுந்தது.


உடனடியாக ஆவேசமான எச்.ராஜா ’வெளியே போ’ என பத்திரிக்கையாளரிடம் கோவப்பட்டதுடன், ”மகாபாரதம் பற்றி ஏன் பேசுகிறீர்கள்.. அப்போ பைபிள் புனைவு என்று சொல்வீர்களா? நீங்கள் கிறிஸ்தவரா?” என கேள்விகள் எழுப்பினார். பின்னர் செய்தியாளர்கள் இந்து விரோத நிலைபாட்டில் இருப்பதாக கண்டனம் தெரிவித்த அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு எழுந்தது.

Edited By: Prasanth.K