சன் தொலைக்காட்சியில் இதுவரை பாதியிலேயே நிறுத்தப்பட்ட சீரியல்கள்… பின்னணி என்ன?
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நான்கு சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் ஜூன் மாதம் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகமாக தற்காலிகமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதனால் இப்போது வரை பழைய சீரியல்களே ஒளிபரப்பப் பட்டு வந்தன. இந்நிலையில் இப்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பு ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அழகு, தமிழ்ச்செல்வி, கல்யாணப் பரிசு மற்றும் சாக்லேட் ஆகிய தொடர்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் பல நடிக, நடிகைகள் கொரோனா காரணமாக தங்கள் சொந்த ஊருக்கே சென்று செட்டில் ஆகிவிட்டதுதான் என சொல்லப்படுகிறது.