1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 4 மே 2017 (17:07 IST)

அடையார் ஆற்றில் தற்கொலை முயற்சி ; ஆனால் நடந்தது வேறு : வீடியோ பாருங்கள்

சென்னை அடையாறு ஆற்றில் நேற்று இரவு ஒரு வாலிபர் தற்கொலை செய்ய முயன்று அது காமெடியில் முடிந்த கதை அரங்கேறியிருக்கிறது.


 

 
நேற்று இரவு 11 மணியளவில், அடையாறு பாலத்தில் திடீரெனெ மக்கள் கூட்டம் சேர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழியாக சென்ற பலரும் பாலத்தின் கீழ் சென்ற ஆற்றை எட்டிப் பார்த்தனர். அப்போது, ஆற்று தண்ணீரில் முட்டிப் போட்ட படி ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார். அதன் பிறகுதான் அங்கு என்ன நடந்தது என மற்றவர்களுக்கு புரிய தொடங்கியது.
 
அதாவது, அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து முடிவெடுத்த அந்த வாலிபர், பாலத்திலிருந்து குதித்துள்ளார். ஆனால், வறட்சியின் காரணமாக அதில் இடுப்பளவு தண்ணீர் கூட இல்லை. எனவே, தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்ததால், அந்த வாலிபர் விரக்தியில் அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கே நின்று கொண்டிருந்தார். அதன் பின் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டார். அவர் யார்?.. ஏன் தற்கொலைக்கு முயன்றார் எனத் தெரியவில்லை. 
 
இந்நிலையில்,அந்த சம்பவத்தை தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்த ஒருவர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.