பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் குருபூஜை.. தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த குருபூஜை இன்று கொண்டாடப்படும் நிலையில் அனைத்து அரசியல்வாதிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேரடியாக சென்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்து கொண்டனர்.
மேலும், பல அரசியல்வாதிகள் குருபூஜையில் கலந்து கொண்டதாகவும், பலர் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது பக்கத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்தில் கூறியிருப்பதாவது:
அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர்.
சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்.
Edited by Mahendran