வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 30 அக்டோபர் 2024 (12:28 IST)

துணை முதல்வர் உதயநிதியை அடுத்து அஜித்தை பாராட்டிய டிஆர்பி ராஜா... என்ன நடக்குது?

அஜித் சில மணி நேரங்களுக்கு முன்பு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த நிலையில், அவரை தொடர்ந்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்களும் வாழ்த்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கி, சமீபத்தில் மாநில மாநாட்டை பிரமாண்டமாக நடத்தினார். அந்த மாநாட்டில் அவருடைய பேச்சு திமுகவுக்கு எதிராக இருந்தது என்பதும், இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜய்யின் போட்டியாளரான அஜித்துக்கு இன்று காலை திடீரென துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். துபாயில் நடைபெற உள்ள ஜி.டி.3 கார் பந்தய போட்டிகளில் அஜித் பங்கேற்க இருப்பதை அடுத்து, அஜித் குமார் பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்களும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து, "தமிழ்நாட்டின் விளையாட்டு துறை உலக அளவிற்கு செல்கிறது, இதற்காக நடிகர் அஜித் குமாருக்கு ஸ்பெஷல் நன்றி," என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Edited by Mahendran