1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (12:14 IST)

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியைக்கு கத்திக்குத்து

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியியல் துறையின் தலைவராக பணியாற்றி வரும் பேராசிரியை ஜெனிபா கத்தியால் குத்தி தாக்கப்பட்டுள்ளார்.


 

 
மதுரை பல்கலைக்கழகத்தில் இதழியியல் துறையின் தலைவராக பேராசிரியை ஜெனிபா பணியாற்றி வருகிறார். கவுரவ விரிவுரையாளராக பணியாற்றிய ஜோதி முருகன் மீது ஜெனிபா நடவடிக்கை எடுத்ததால் அவர் ஆத்திரத்தில் ஜெனிபாவை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளே நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த ஜெனிபா, ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து கத்தியால் குத்திய தற்காலிக பணியாளரான ஜோதி முருகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பேராசிரியர் பலகலைக்கழக வளாகத்தில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.