செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 23 மார்ச் 2017 (19:47 IST)

சென்னையில் பெண்ணுக்கு கத்திக்குத்து; கொலையாளியை துரத்தி பிடித்த நாய்கள்

சென்னை எண்ணூரில் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்ற கொலையாளியை இரண்டு வளர்ப்பு நாய்கள் துரத்திப் பிடித்தன.


 


 
சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற கொலையாளியை இரண்டு வளர்ப்பு நாய்கள் துரத்திப் பிடித்துள்ளன. இதையடுத்து அந்த கொலையாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது:-
 
சுனிதா(30) என்பவர் புதன்கிழமை காலை அலுவலகம் செல்வதற்காக விடுதியில் இருந்து சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென ஒரு நபர் சுனிதாவை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் சுனிதாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற கொலையாளியை ஆட்டோ ஓட்டுநர் ராம் என்பவர் பிடிக்க முயன்றார். அப்போது அந்த கொலையாளி கத்தியை காட்டி மிரட்டிய படி ராமை தெருங்கியுள்ளார். அப்போது அங்கிருந்த இரண்டு நாய்கள் கொலையாளியை சுற்றுவளைத்தது. இதன்மூலம் அந்த கொலையாளையை பிடித்தனர்.
 
இதையடுத்து காவல்துறையினர் ரகுநாத்தை கைது செய்தனர். விசரணையில் அந்த கொலையாளி சுனிதா பணிபுரியும் அலுவலகத்தில் பனிபுரியும் என்பது தெரியவந்தது. அவர் பெயர் ரகுநாத். சுனிதாவுடன் ஏற்பட்ட தகராறில் ரகுநாத் கத்தியால் குத்தியுள்ளார், என தெரியவந்தது.