செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 27 பிப்ரவரி 2020 (20:48 IST)

மைதானத்தில் ‘பிட்ச் ரோலரை ’ ஓட்டிய தல தோனி... வைரல் வீடியோ

மைதானத்தில் ‘பிட்ச் ரோலரை ’ ஓட்டிய தல தோனி... வைரல் வீடியோ

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மைதானத்தில் பிட்ச் சமம் செய்யும் ரோலரை ஓட்டும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
 
ஜார்கண்ட் மாநிலம் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் உள்ள பிட்சை  சமன்செய்ய பயன்படும் ரோலரை தல தோனி இயக்கும் பணியில் தோனி ஈடுபட்டார்.
 
சமீப காலமாகவே தோனி இந்திய அணியில் இடம்பெறவில்லை. அதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், வரும் ஐபிஎல் தொடரில் தோனியில் அதிரடி ஹெலிகாப்டர் ஷாட்டை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
 
இதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி  , ஆடுகள பொறுப்பாளர் பாசுதா  மைதானத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் கொண்டுவந்த பிட்ச் ரோலரை இயக்கினார் தோனி.