செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2023 (21:49 IST)

சென்னையில் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி

chess competition
சென்னை லீலா பேலஸில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது.

சென்னை லீலா பேலஸில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன் 2023 போட்டி டிசம்பர் 1 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த செஸ் தொடரில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவர்கள் 7 ரவுண்ட் ராபின் சுற்றுகள் கிளாசிக் செஸ் வகையில் விளையாட உள்ளனர்.
இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.50 லட்சம் தமிழக அரசு வழங்கவுள்ளதாக தமிழ்நாடு விளையாடு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

இப்போட்டியின் மூலம் குகேஷ் , அர்ஜூன் எரிகேசி ஆகியோர் இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் கேண்டிடேட் போட்டிக்கு தகுதிபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.