வாய்க்காலில் சடலமாக மிதந்த சிறுவன் உடல்!
கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வாய்க்காலில் சிறுவன் உடல் சடலமாக மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள உக்கரம் குப்பன் துறை என போகுதியில் கீழ்பவானில் வாய்க்காலில் ஒரு சிறுவன் உடல் மிதந்து வருவதை அங்குள்ள மக்கள் பார்த்தனர்.
இதுபற்றி கடத்தூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் அங்கு விரைந்து வந்த போலீஸார், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு முதலுதவி செய்ய முயன்றனர. ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.
இறந்த சிறுவம் பற்றியும் அவர் எப்படி வாய்க்காலில் சடலமாக மிதந்தார் என்று போலீஸார் விசாரித்தது வருகின்றனர்.