1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 11 நவம்பர் 2020 (18:21 IST)

அடுத்த ஆண்டும் 10, 12 மாணவர்களுக்கு தேர்வு கிடையாது: எந்த மாநிலத்தில் தெரியுமா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் முழுவதுமாக முடக்கப்பட்டிருந்தது மட்டுமின்றி பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டும் அதாவது 2020-2021ஆம் ஆண்டும் இறுதி தேர்வு கிடையாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
 
இதன்படி மேற்கு வங்காளத்தில் நடப்பாண்டு 2020-2021 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து இம்மாத மத்தியில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.