திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 23 ஜூலை 2022 (18:16 IST)

மயங்கி விழுந்தவருக்கு முதலுதவி செய்த கவர்னர் தமிழிசை !

tamilisai
டில்லியில் இருந்து ஐதராபாத் சென்ற விமானத்தில் பயணித்த ஒரு பயணி மயக்கம் அடைந்தார். அவருக்கு தெலுங்கான கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி சிகிச்சை அளித்தார்.

தமிழக முன்னாள்  பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாஜக மேலிடம் தெலுங்கானா மா நில கவர்னராக நியமித்தது. அத்துடன் புதுச்சேரி துணை நிலை ஆளு நராகவும் இருந்தார்.

இந்த நிலையில், டில்லியில் இருந்து ஐதராபாத் சென்ற விமானத்தில், இன்று அதிகாலை 4 மணியளவில் விமானம் சென்றுகொண்டிருக்குபோது, ஒரு பயணி மயங்கி விழுந்துள்ளார். அதைப் பார்த்து யாராவது டாகர் இருக்கிறீர்களா என கேட்டுள்ளார். அப்போது தமிழிசை எழுந்து அந்த பயணிக்கு சிகிச்சை அளித்தார். இதனால் கவர்னர் தமிழிசைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறார்.