ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 மே 2023 (08:53 IST)

திராவிட மாடலே காலாவதியான ஒன்று..! – ஆளுனர் ரவி சர்ச்சை பேச்சு!

தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக அரசை விமர்சிக்கும் வகையில் ஆளுனர் ரவி பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. தமிழ்நாட்டின் கவர்னராக ஆளுனர் ஆர்.என்.ரவி உள்ள நிலையில் அடிக்கடி மாநில அரசுக்கு, கவர்னருக்கும் இடையே மோதல்கள் எழுந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் இரண்டு முறை சட்டமன்றத்தில் ஆளுனருக்கு எதிராக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுனர் ஆர்.என்.ரவி “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல மனிதர். அவர்மீது நல்ல மரியாதை வைத்துள்ளேன். ஆனால் திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியான ஒன்று. அதை மீண்டும் புதுப்பிக்க முயற்சி நடக்கிறது. ஒரே நாடு ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரான கொள்கைதான் திராவிட மாடல்” என பேசியுள்ளார்.

தற்போது திமுக அரசு திராவிட மாடல் என்ற கொள்கையை முன்வைத்து திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், ஆளுனர் ஆர்.என்.ரவி அதை தாக்கி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K