1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2016 (10:01 IST)

ராம்குமார் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு; அரசு வேலை: கிடைக்குமா?

ராம்குமார் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு; அரசு வேலை: கிடைக்குமா?

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ராம்குமார் கடந்த ஞாயிறு அன்று தற்கொலை செய்துகொண்டு இறந்ததாக தகவல் கூறப்பட்டது. இந்த மரணம் தற்கொலையா, கொலையா என்பதை தீர்மாணிக்கும் பிரேத பரிசோதனை இன்னமும் நடைபெறவில்லை.


 
 
இதனையடுத்து, இந்த மரணம் தற்கொலை அல்ல, கொலை தான் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ராம்குமார் குற்றவாளி இல்லை, நிரபராதி தான் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
 
இந்நிலையில் அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். அவை, ராம்குமார் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ராம்குமாரின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். ராம்குமார் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
 
மேலும் சுவாதியை கொலை செய்த உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்னர் அம்பேத்கார் மக்கள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.