1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (14:20 IST)

சென்னையில் அரசு நிர்வாகம் செயல் இழந்து விட்டது! – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி ஜாபர் அலியின் நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டை நகர் மன்றத்தில் கண் சிகிச்சை முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது


 
முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முகாமை தொடங்கி வைத்தார் இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் பாஸ்கர்:

சென்னையில் சுகாதாரத்துறை சுனக்கத்தில் உள்ளது, அரசு நிர்வாகம் செயல் இழந்து விட்டது. தேங்கியிருக்கும் மழை நீரால் மிகப்பெரிய நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது, இறந்து கிடக்கும் பிராணிகளால்  பெரிய அளவிலான தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது,

இயற்கை பேரிடர் என்பது ஒன்று தான், இயற்கை பேரிடரை எதிர் கொள்ள திறன் வேண்டும், மக்களுக்கு நம்பிக்கை என்பது அரசாங்கம் தான்,ஆனால் திமுக அரசு இந்த இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் தோல்வி அடைந்து விட்டது,

தற்போதைய சூழலில் கூட சுகாதாரத்துறை ரொம்ப தாமதமாக இயங்குகிறது,சென்னை நகரில் பிளிச்சிங் பவுடர் கூட போடவில்லை,

அதேபோல லாரிகளில் வழங்கப்படும் குடிநீரின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது, குளோரின் கலந்த குடிநீர் வழங்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது எந்த இடத்திலும் அது கண்காணிக்கப்படுவதாக தெரியவில்லை,

முறையற்ற குடிநீர் வழங்கப்படும் போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக, எந்த பேரிடர் வந்தாலும் நோய் தொற்று ஏற்படும் என்பது உலக நீதி,அத்னை தடுக்க அரசு தயாராக இருந்திருக்க வேண்டும் ஆனால் எதிர்கொள்ள எந்தவித திட்டமிடலையும் முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை

6000 நிவாரணத் தொகை அறிவித்த மக்களை ஏமாற்றி விட முடியாது இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தான் கேள்வி கேட்க முடியும் இதில் எதிர்க்கட்சிகளை குறை சொல்லி பயனில்லை

இனியாவது சுகாதாரத்துறை விழித்துக் கொண்டு சென்னையில் சுகாதாரத்தை பேணி காக்க முன்வர வேண்டும் குறிப்பாக குடிநீரில் குளோரின் கலந்து உள்ளதா என்பதை சரி செய்து கோரின் கலந்து பரிசோதனை செய்து அதன் பிறகு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்

அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இயற்கை பேரிடர்களின் அத்தியாவசிய பொருளாக உள்ள குடிநீர் மற்றும் பாலுக்கு எந்த விதமான தட்டுப்பாடும் ஏற்படவில்லை தற்போதைய திமுக அரசின் சரியான திட்டங்கள் இல்லாததால் அத்தியாவசிய பொருள்கான பால் மற்றும் தண்ணீர் கூட கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திறமையாக கையாளாகாத காரணத்தால் இத்தகைய நிலைமை சென்னையில் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.