1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 மார்ச் 2022 (17:16 IST)

என் மகனின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது: கோகுல்ராஜ் தாயார் பேட்டி

என் மகனின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது: கோகுல்ராஜ் தாயார் பேட்டி
தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் கொலை வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது என்பதும் இன்று முக்கிய குற்றவாளிகள் 3 ஆயுள் தண்டனை உள்பட தீர்ப்புகளை விவரங்கள் அறிவிக்கப் பட்டது என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் தீர்ப்புக்கு பின்னர் கோகுல்ராஜின் தாயார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஒரு ரூபாய் கூட வாங்காமல் எங்களுக்காக போராடி நீதி வாங்கித் தந்த வழக்கறிஞர் மோகன் அய்யாவுக்கு தனது நன்றி என்று கூறினார் 
 
மேலும் விஷ்ணு பிரியா மேடம், சிபிசிஐடி போலீசார் ஆகியோருக்கும் எனது நன்றி என்று கூறிய கோகுல்ராஜின் தாயார் சித்ரா, ‘என் மகனின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று தெரிவித்தார்