பாஜகவுடன் இணைகிறதா தமாகா? மோடியுடன் மீட்டிங் போட்டு வந்த வாசன்!

Sugapriya Prakash| Last Updated: புதன், 6 நவம்பர் 2019 (13:04 IST)
மோடியை சந்தித்துவிட்டு வந்த ஜி.கே.வாசன் பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 
 
டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பிறகு ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 
 
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மோடியிடம் எடுத்து கூறினேன். தமிழக அரசியல் சூழல் குறித்தும் மரியாதை நிமித்தமாகவும் பிரதமர் மோடியை சந்தித்தேன். 
 
இந்த முறை உள்துறௌ அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமில்லை. பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணையும் என வெளியாகும் செய்தி வதந்தியே. தமிழ் மாநில காங்கிரஸ் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் என தெளிவுபடுத்தியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :