1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 17 டிசம்பர் 2016 (16:58 IST)

பேஸ்புக்கில் தொடங்கி பலாத்கார கொலையில் முடிந்த பெண்ணின் நட்பு!!

சென்னை, மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையிலுள்ள லாட்ஜ் ஒன்றின் அறைக்குள் இளம்பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
 
விசாரணையில், அந்த பெண் மயிலாப்பூர் பி.வி.கோவில் தெருவைச் சேர்ந்த எத்திராஜ் எனும் பழைய பேப்பர் கடை வைத்துள்ளவரின் மகள் தெரியவந்தது. அப்பெண் வேலை தேடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 
 
கடந்த 14ம் தேதி பகல் நேரத்தில் அந்த லாட்ஜில் ரூம் புக் செய்துள்ளார். தோழிகள் வர உள்ளதாக கூறி லாட்ஜை புக் செய்துள்ளார். ஆனால் இரு ஆண்கள் தான் வந்துள்ளனர். 
 
15ம் தேதி மாலை இரு ஆண்கள் மட்டும் ரூமிலிருந்து வெளியேறியுள்ளனர். பின்னர், அந்த பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கழுத்தில் காயம் இருப்பதால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. 
 
போலீசார் விசாரணையில் பேஸ்புக் நண்பர் ஒருவருடனான நெருக்கமே அந்த பெண்ணை லாட்ஜில் ரூம் புக் செய்ய தூண்டியுள்ளது, என்பது தெரியவந்துள்ளது. 
 
பேஸ்புக் நண்பர் பெங்களூரை சேர்ந்தவர் என்பதால் அவரை போலீசார் தேடி பெங்களூர் சென்றுள்ளனர்.