திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (10:28 IST)

சிறுமியை ஆசைவார்த்தைக் கூறி கர்ப்பமாக்கிய இளைஞர் – போக்ஸோ சட்டத்தில் கைது!

கொடைக்கானலில் தேநீர் கடை வைத்திருக்கும் அஸ்கர் அலி என்பவர் மைனர் பெண்ணைக் கர்ப்பமாக்கியதால் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 15 வயது சிறுமிக்கு தனது பள்ளிக்கு செல்லும் வழியில் தேநீர் கடை வைத்திருக்கும் அஸ்கர் அலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு அலி அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி மயக்கியுள்ளார். பின்னர் அவரை காதலிப்பதாக சொல்லி உடலுறவும் வைத்துக்கொண்டுள்ளார். இதன் விளைவாக அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார்.

ஒருநாள் அவர் வீட்டில் மயங்கி விழ பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்த போது இந்த விஷயம் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதன் பின்னர் அவர்கள் அளித்த புகாரின் பேரில் அஸ்கர் அலி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.