செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: சனி, 17 நவம்பர் 2018 (10:23 IST)

கஜா புயல் நிவாரணம்:மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி பாராட்டு

நேற்று தமிழகத்தின் வழியாக கரையை கடந்த கஜா புயலால் 13 உயிரிழந்தனர். ஏராளமான மக்கள் வெள்ளம் மற்றும் புயலால் வீடுகளை இழந்துள்ளனர். 

யானையின் தும்பிக்கைபோலவே இருந்த கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நிவாரண உதவிகள் அரசு சார்பில் மட்டும் இல்லாமல் பல தரப்பினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 நடிகர் ரஜினியின் மக்கள் மன்றம் மக்களுக்குபல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆறுதல்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளைச் செய்துவரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறேன். நமது நிவாரண உதவிகள் தொடரட்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.