1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 3 ஜூலை 2021 (21:24 IST)

உங்களுக்கு இன்னும் என்ன கருத்து சுதந்திரம் வேண்டும்? கார்த்திக் சுப்புராஜூக்கு காயத்ரி கேள்வி

உங்களுக்கு இன்னும் என்ன கருத்து சுதந்திரம் தேவை என்று நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
மத்திய அரசின் புதிய ஒளிபரப்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். அந்த கருத்தில் ஒளிப்பதிவு திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது கலையுலக கருத்து சுதந்திரத்திற்கு பெரிய அடியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு நடிகை காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது:
 
எப்படியும் இந்த நாட்களில் எந்த திரைப்படத்திலும் கருத்து இல்லை .. உங்கள் படங்களில் 4 சண்டைக் காட்சிகளும் 4 பாடல்களும் 4 சென்டிமென்ட் காட்சிகளும் 2 mass opening காட்சிகளும், ரவுடிகள் மட்டும் ஹீரோக்கள்.  வேறு எதுவும் இல்லை. இதில் உங்களுக்கு இன்னும் என்ன கருத்து சுதந்திரம் வேண்டும்?