செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 13 மே 2019 (15:21 IST)

நீலிக்கண்ணீர் வடித்து மக்களை திசை திருப்புகிறீர்! கமலை விளாசிய காயத்ரி!

சினிமா, பர்சனல், அரசியல் என எல்லா விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசும் நடிகை காயத்ரி ரகுராம் தற்போது உலக நாயகன் கமல் ஹாஸனை முதிகில் குத்துபவர் என்று கூறியுள்ளார். 


 
பள்ளப்பட்டியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன்  ’உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று  தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில்  தற்போது நடிகை காயத்ரி ரகுராம் இதற்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது,  கமல் ஹாசன் முதுகில் குத்துபவர் என்றும்  இது போன்ற முட்டாள்தனமான பேச்சுகளை விட்டுவிட்டு மாற்றத்தை ஏற்படுத்துங்கள் அதற்காக தான் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். கொலைகாரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. தீவிரவாதத்தில் மதத்தை கொண்டு வர வேண்டாம். கமல் ஹாசன், நீங்கள் திரையுகில் சிறந்த மனிதர் என்பதில் ஐயம் இல்லை ஆனால் அரசியல் என்பது மேடை நாடகம் இல்லை.
 
மோசமான அரசியல்வாதிகளின் ஆதரவை பெற, மக்களிடம் அனுதாபத்தை பெற அழுது மேலும் ஒரு நடிகராகிவிடாதீர்கள். மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்ற  நம்பிக்கையில் தான் மக்கள் வாக்களிக்கிறார்கள். ஆனால் இது போன்ற வார்த்தைகளை அல்ல. மாற்றமாக இருங்கள். மேலும் ஒரு அரசியல்வாதியாக அல்ல. 


 
இங்கே என்னை முதுகில் குத்துபவர்கள் பலர் உள்ளனர். அவர்களை நான் தீவிரவாதிகள் என்று கூறட்டுமா? அது உங்களையும் சேர்த்து தான் . மேலும் பல வருடங்களாக காங்கிரஸ் இந்தியாவின் முதுகில் குத்தியுள்ளது. அப்படி என்றால் காங்கிரசை தீவிரவாதி என்று கூறலாமா ? நடித்தது போதும் என கமலுக்கு டேக் செய்து விளாசியுள்ளார் காயத்ரி ரகுராம்.