ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 11 மார்ச் 2021 (08:41 IST)

இந்த உறவு என்றும் நிலைத்திருக்கும்: இராஜபாளையம் மக்களுக்கு கெளதமி டுவீட்!

இராஜபாளையம் மக்களுடனான தனது உறவு என்றும் நிலைத்திருக்கும் என நடிகை கவுதமி தனது டுவிட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை செய்துள்ளார் 
 
இராஜபாளையம் தொகுதியில் போட்டியிட கௌதமி திட்டமிட்டு இருந்தார் என்றும் அதற்காக அவர் சில மாதங்களாக அந்த பகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இராஜபாளையம் தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் என்பதும் இந்து முன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அவர்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. கௌதமின் சொந்த மாநிலம் ஆந்திரா என்பதால் அவர் தெலுங்கில் பேசி தெலுங்கு பேசும் மக்களை கவர்ந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து இராஜபாளையம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டால் கெளதமி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் கண்டிப்பாக அவர் தொகுதியில் வெற்றி பெறுவார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக அதிமுகவுக்கு இராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டது என்பதும் அந்தத் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இராஜபாளையம் தொகுதி கிடைக்காத வருத்தத்தில் கெளதமி பதிவு செய்த உருக்கமான டுவிட்டில் கூறியிருப்பதாவது: இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னை பாவித்து கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள். என்றும் எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்கு தலைவணங்கி, உங்களுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன்.
 
உங்கள் அன்பின் வாயிலாக  கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன்.