ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (10:57 IST)

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு!

Organ Donor
தமிழ்நாட்டில் உடல் உறுப்புகளை தானம் செய்பவர்கள் இறந்தால் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவ்வாறாக ஒருவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.



மூளைச்சாவு அடைந்தவர்கள் தங்கள் உறுப்புகளை முன்னதாகவே தானமாக அளிப்பதாக பதிவு செய்திருந்தால் அவர்கள் ஒருவேளை இறக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த அரசு ஊழியர் வடிவேலு என்பவரும் இந்த உடல் உறுப்பு தானத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கிய வடிவேலு படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டது தெரிய வந்தது.

அவர் உடல் உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்திருந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அவரது இறுதி சடங்கு அவரது ஊரில் இன்று அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது. இந்த இறுதி சடங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கிறார்.

Edit by Prasanth.K