1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. From tomorrow tomato sales in ration store

ரேசன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை.. அனைத்து அனைவருக்கும் கிடைக்குமா?

தக்காளி
நாளை முதல் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவருக்கும் கிடைக்குமா அல்லது அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 
 
தக்காளி விலை தற்போது சில்லறை விலையாக ரூ.150 என விற்பனை ஆகி வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் கஷ்டத்தில் உள்ளனர் 
 
இந்த நிலையில் சென்னையில் நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார் பண்ணை பசுமை கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் நிலையில் நியாய விலை கடைகளிலும் அதே விலை விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தக்காளி விளைச்சல் பாதிப்பு மற்றும் வரத்து குறைவால் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைப்புக்கு திமுக காரணமா? பரபரப்பு தகவல்..!