ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 ஜூலை 2023 (07:37 IST)

உச்சத்தை எட்டிய தக்காளி விலை.. ஒரு கிலோ ரூ.140.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Tomato
தக்காளி விலை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் இன்று தக்காளி விலை உச்சத்திற்கு சென்றுள்ளதாகவும் சில்லறை கடைகளில் ஒரு கிலோ ரூபாய் 140 என விற்பனையாகி வருவதாகவும் வெளி வந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கோயம்பேடு சந்தையில் நேற்று 90 முதல் 100 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனையான நிலையில் இன்று பத்து ரூபாய் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 முதல் 140 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து வருவதால் கடும் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் பண்ணை பசுமை கடைகளில் 60 முதல் 80 ரூபாய் வரை தக்காளி விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது
 
Edited by Siva