நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. மீண்டும் கனமழையா?
வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு தோன்ற இருப்பதை அழுத்து மீண்டும் கனமழையா என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் எழுந்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் என்றும் மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்து தாழ்வு காரணமாக எந்த அளவுக்கு மழை பெய்யும் என்பதை இனிமேல் தான் கணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் தற்போது வறண்ட வானிலை நிலை வரும் நிலையில் மழை பெய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Siva