வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (10:54 IST)

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை முதல் பள்ளிகள் இயங்குமா?

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் நாளை முதல் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் புயல் காரணமாக கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 11 முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் நாளை சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என்ற உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் புயலால் சேதம் அடைந்த பள்ளி கல்லூரிகளை சீரமைக்கும் பணி முடியும் தருவாயில் இருப்பதாகவும் இன்றுக்குள் அந்த பணிகள் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. 
 
மேலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva