Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2017 (05:49 IST)
இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத தத்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை இன்று முதல் அதாவது பிப்ரவரி 23 முதல் ஆன்லைன் மூலம் டவுண்ட்லோடு செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10ஆம்வகுப்பு பொதுத் தேர்வெழுத சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தத்கல்) கடந்த பிப்ரவரி 16, 17 தேதிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், வியாழக்கிழமை (பிப்.23) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
இவ்வாறு அந்த செய்திக்குறிபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.