திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (07:42 IST)

ஜூன் 3 முதல் தடுப்பூசி போடும் நிறுத்தம்: ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதன் காரணமாக ஜூன் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே அதாவது இன்றும் நாளையும் மட்டுமே தடுப்பூசி போடுவதற்கு ஸ்டாக் இருப்பதாகவும் ஜூன் 6ஆம் தேதி தான் தடுப்பூசி மத்திய அரசு அனுப்ப உள்ளதன் காரணமாக ஜூன் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
 
மே மாதத்திற்கான தடுப்பூசியே இன்னும் 1.74 லட்சம் மத்திய அரசிடமிருந்து வர வேண்டியுள்ளது என்றும் ஜூன் மாதத்திற்கு 42.58 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்தால் மட்டுமே அடுத்ததாக தடுப்பூசி போடும் பணி தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்