1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 21 மார்ச் 2022 (09:34 IST)

1,000 படுக்கைகளுடன் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதலமைச்சர் அடிக்கல்

ஆயிரம் படுக்கைகளுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 
 
சென்னை கிண்டியில் ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்படவுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் சமீபத்தில் கூறினார் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இந்த மருத்துவமனைக்கான அடிக்கல்லை இன்று முதல்வர் ஸ்டாலின் நாட்டினார். கிண்டியில் உள்ள நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் இந்த பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ரூபாய் 250 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள இந்த மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது