ஆண்களுக்கு ஊக்கத் தொகையுடன் இலவச குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை.. தமிழக அரசு அறிவிப்பு
ஆண்களுக்கு ஊக்கத் தொகையுடன் இலவச குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வது போல் ஆண்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஆண்கள் பெரும்பாலும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வதில்லை.
இந்த நிலையில் ஆண்களுக்கு தமிழகம் முழுவதும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாகவும் குடும்ப கட்டுப்பாடு செய்ய வரும் ஆண்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் இலவசமாக சிகிச்சை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீன குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை வார விழா கடைபிடிக்கப்படுவதாகவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆண்களுக்கு இலவச குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva