1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 29 ஜூன் 2024 (13:33 IST)

தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயமாகின்றன.. சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்..!

assembly
தமிழகத்தில் புதிதாக திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் உதயமாகின்றன. இதற்கான வருவாய், மக்கள் தொகை வரம்புகள் திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
 
மாநகராட்சியாக தரம் உயர்த்த தடையாக இருந்த மக்கள் தொகை, ஆண்டு வருமானத்தை தளர்த்தி திருத்தப்பட்ட மசோதா நிறைவேறியதை அடுத்தே மேற்கண்ட 4 மாநகராட்சிகள் புதிதாக உருவாகவுள்ளன.
 
நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவில் மக்கள் தொகை 3 லட்சத்தில் இருந்து 2 லட்சமாகவும், ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி உதயமாகிறது.
 
அதேபோல் திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி உதயமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran