முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி? என்ன ஆச்சு
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சற்று முன்னர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை ஆரிய வைத்திய சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஓபிஎஸ், அங்கு இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இன்று காலை சென்னையில் நடைபெற்ற கட்சி பிரமுகர்களின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஓபிஎஸ் நிகழ்ச்சி ஒன்றுக்காக கோவை வந்ததாகவும், இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.