1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2019 (18:46 IST)

நித்தியானந்தா மீது வெளிநாட்டுப் பெண் சரமாரி புகார் !

மேட்டூர் அணையில்  உள்ள கோயிலை முன் ஜென்மத்தில் கட்டியதாக, நித்தியானந்தா புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், தற்போது ஒரு கனடா நாட்டுப் பெண், நித்தியானந்தா மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் கூறியுள்ளார்.
கனடா நாட்டைச் சேர்ந்த பெண் சாரா லேண்ட்ரி. இவர், இந்தியாவுக்கு வந்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்ந்து ருத்ர கன்னியாக துறவறம் இருந்தார்.  அவருக்கு நித்தியானந்தா ஸ்ரீ நித்தியா  ஸ்வரூப்பா பிரியானந்தா  என பெயர் மாற்றப்பட்டார். 
 
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2017 ஆம் ஆண்டு நான் நித்தியானந்தாவால், திருவனந்தபுரத்தில் உள்ள குருகுலத்தில் சேர்க்கப்பட்டேன். அதன்பின், அங்குள்ள சிறுவர் சிறுமிகளுக்கு சமூக வலைதளங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என கற்றுக்கொடுத்தேன். பின்னர், அங்கு, ஒருநாள் சிறுவர், சிறுமிகள் அழுதுகொண்டிருந்தனர், அதுபற்றி கேட்டேன். அப்போது, அங்கு நடந்துவரும்  கொடுமைகள் பற்றி கூறினார்கள். முக்கியமாக இயற்கை உபாதைகள் கழிக்கக்கூட விடுவதில்லை என்று கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
மேலும், இந்தக் கொடுமைகள் பற்றி நடிகை ரஞ்சிதாவிடம் தான் கூறினேன். அதற்கு அவர் ஓன்றும் செய்யவில்லை. என்னை நித்தியானந்தா மூளைச் சலவை செய்து வைத்திருந்தார். நான் அவரை சந்தித்த பின்னர் தான், அவரிடம் சக்தி எதுவும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன் என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினர் சாரா லேண்ட்ரிக்கு ஆதரவுக் குரல் கொடுத்து வருகின்றனர்.