செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 24 ஏப்ரல் 2021 (11:56 IST)

முதன் முறையாக நெல்லையில் இன்று ஒரே நாளில் 523 பேருக்கு கொரோனா தொற்று!

இன்று ஒரே நாளில் நெல்லை மாவட்டத்தில் 523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
 
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மே மாதத்தில் இன்னும் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.
 
இருந்தும் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் தற்போது சற்றுமுன் வெளிவந்துள்ள  தகவலின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் முதன் முறையாக 523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.