புதன், 5 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜனவரி 2019 (14:16 IST)

அஜித் படத்தில் வித்யா பாலன் – சாத்தியமானது எப்படி?

பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் அஜித் நடிக்கும் பிங்க் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக விளங்குபவர் வித்யா பாலன். இவர் நடிக்கும் படங்களுக்கென பாலிவுட்டில் ஒரு மார்க்கெட் உள்ளது. பாலிவுட்டில் பரபரப்பாக கதாநாயகியாக இவர் இருந்த காலத்தில் இருந்தே இவரைக் கோலிவுட்டில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர் பிடிவாதமாக நடிக்க மறுத்துவிட்டார்.

வித்யா பாலன் முதன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே வாய்ப்பு தேடியது கோலிவுட்டில்தான். ஆனால் அவரை ராசியில்லாத நடிகை என ஓரம்கட்டியது கோலிவுட். அதன் பின்னார் பாலிவுட் சென்று தனது நடிப்புத் திறமையால் அங்கு முன்னனி நடிகையாக மாறி தேசிய விருதையும் வென்றுள்ளார். பின்னர் கோலிவுட்டில் இருந்து எந்த வாய்ப்புகள் வந்தாலும் அவற்றை நிராகரித்து வந்தார். கடைசியாக காலாவில் கூட அவரை நடிக்க வைக்கும் முய்ற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.

ஆனால் இப்போது வித்யாபாலன் தமிழ்ப்படமொன்றில் நடிக்க இருக்கிறார். அஜித்தின் அடுத்த படமாக ஹெச் வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக் உருவாக இருக்கிறது. இந்தப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் வித்யா பாலன் தோன்ற இருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொன்டது ஏன் என்றக் கேள்விக்கு படத்தைத் தயாரிக்கும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்காக தான் நடிக்க சம்மதம் தெரிவித்தாக சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.