1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (09:20 IST)

விளையாட்டு வினையானது.. கால்பந்து போட்டியில் மோதல்! 127 பேர் பலி!

Football
இந்தோனேசியாவில் நடந்த கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள மலாங் மாகாணத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெற்றது. கஞ்சுருஹான் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் அந்த ஊரின் சொந்த அணியான அரேமா அணியுடன் பெர்சேபயா சுரபயா அணி மோதியது.

இந்த போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் சுரபயா அணியிடம் தோல்விடை தழுவியது. அரேமா அணி சொந்த மண்ணிலேயே தோல்வி அடைந்தது அதன் ரசிகர்களை வெகுவாக கோபப்படுத்தியுள்ளது. இதனால் அரேமா அணி ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்த நிலையில் மற்றவர்களும் புகுந்ததால் பெரும் மோதல் ஏற்பட்டது.


இந்த மோதலை தடுக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இந்த பெரும் மோதலில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர். இந்த மோதல் சம்பவத்தில் 2 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

34 பேர் மைதானத்திற்குள் உயிரிழந்துள்ளனர், மீதம் பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.