1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (12:50 IST)

தமிழகத்திற்கு மழை அலர்ட்

தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது. 
 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்  கனமழை பெய்யக்கூடும்.

மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.