1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu have red alert for heavy rain fall

தமிழகத்தில் அதி கனமழை; மக்களே உஷார்! – ரெட் அலர்ட் அறிவிப்பு!

Tamilnadu
தமிழகத்தில் இன்றும் நாளையும் பல பகுதிகளில் அதிகனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும், நாளையும் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகனமழை பெய்ய உள்ளதாக் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
டாடாவின் ஏல திட்டத்திற்கு ஒப்புதல்: ஏர் இந்தியா கைமாறுவ்து கிட்டதட்ட உறுதி!