1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (15:51 IST)

செய்தி வாசிப்பாளர்களுக்கு விருந்து!

தற்போது செய்தி வாசிப்பிலிருந்தும், நடிப்பிலிருந்தும் விலகி இருக்கும் பாத்திமா பாபு. அ.தி.மு.கவில் இணைந்து அந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்தவர்.


 
இந்நிலையில், இளம் செய்தி வாசிப்பாளர்களை கவுரவிக்க நினைத்த இவர், அவர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளார். அப்போது தனது செய்தி வாசிப்பு அனுபங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதில் அனைத்து செய்தி சேனல்களையும் சேர்ந்த செய்தி வாசிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு காலத்தில் நட்சத்திர தொகுப்பாளினியாக இருந்த பாத்திமா பாபு, உச்சரிப்பிலும், செய்திக்கேற்ற புருவ அசைவிலும் தனித்தன்மை வாய்ந்தவர் என்பதும், செய்தி எப்படி இருந்தாலும் இவர் முகத்தை பார்ப்பதற்கென்றே அன்று செய்தியை பார்த்தவர்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.