சம்பந்தம் பேச அழைத்து காதலனை கொன்ற தந்தை
நெல்லை மாவட்டத்தில் தந்தை ஒருவர் தனது மகளை காதலித்த நபரை திருமணம் குறித்து பேச வீட்டிற்கு அழைத்து வெட்டி கொலை செய்துள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள தேவர் குளம் கிரமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் பெருமாள். இவரது மகள் கஸ்தூரி மற்றும் நெய்காரப்பட்டியை சேர்ந்த சிவகுருநாதன் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு கஸ்தூரியின் தந்தை முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். பின்னர் ஒரு வழியாக சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து திருமணம் தொடர்பாக பேச வேண்டும் என்று லெட்சுமணன் சிவகுருநாதனை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
வீட்டிற்கு வந்த சிவகுருநாதனை லெட்சுமணன் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். அதன்பின்னர் சங்கரன் கோவில் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். மேலும் காவல்துறையினர் லெட்சுமணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.