1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 24 ஏப்ரல் 2017 (05:47 IST)

முடிவுக்கு வந்தது 41 நாள் போராட்டம். விவசாயிகள் சாதித்தது என்ன?

தமிழக விவசாயிகள் கடந்த 41 நாட்களாக பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் நேற்று தங்கள் போராட்டங்களை முடித்து கொண்டு தமிழகம் திரும்பவுள்ளனர். நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை சந்தித்து பேசியதை அடுத்து இந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.



 
 
வங்கிக்கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடிய விவசாயிகள் பிரதமர் வந்து தங்களை சந்திக்கும் வரை போராட்டம் நீடிக்கும் என்று கூறிய நிலையில் நேற்று போராட்டத்தை முடித்து கொண்டனர். பிரதமரோ அல்லது முக்கிய அமைச்சர்களோ கடைசி வரை சந்திக்கவில்லை.
 
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு இல்லாததே தோல்வி அடைய காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகள் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக புதிய அணைகள், புதிய திட்டங்கள், நதிகள் இணைப்பு, கடலில் சென்று வீணாகும் மழை நீரை சேமிக்கும் திட்டம், விவசாயிகளின் விளைச்சலுக்கு சரியான விலை போன்ற பல விஷயங்அளில் கவனம் செலுத்தாமல் மாறி மாறி இலவசங்களுக்கு மட்டுமே கவனம் செலுத்தியது. 
 
விவசாயிகளின் தற்போதைய பரிதாபமான நிலைக்கு இதுவரை ஆட்சி புரிந்த வந்த தமிழக திராவிட கட்சிகளே காரணமாக இருக்கும்போது, விவசாயிகள் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் செய்ததை பெரும்பாலான பொதுமக்கள் ரசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.