1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (13:25 IST)

நெல் பயிர் காப்பீடு: கடைசி நாள் அறிவிப்பு!

நெல் பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்து கொள்ளும்படி அறிவுத்தப்பட்டுள்ளனர் 
 
பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத விவசாயிகள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என வேளாண் துறை செயலர் தெரிவித்துள்ளார் 
 
அனைத்து மாவட்டங்களிலும்  நெல் பெயரை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் முழுவீச்சில் காப்பீடு செய்து வரும் நிலையில் இதுவரை 5.6 லட்சம் விவசாயிகள் காப்பீட்டு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இந்தநிலையில்
 
தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார். திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், சிவகங்கை, கடலுார், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில், சம்பா பருவத்தில், நெல் பயிரை காப்பீடு செய்வதற்கு 15ம் தேதி கடைசி நாள்.கன்னியாகுமரி, அரியலுார், திண்டுக்கல், விருது நகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை பொறுத்தவரை, டிச., 15 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.,