வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 16 மே 2022 (19:56 IST)

அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் உயர்வு - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம் வலயப்பட்டி வேப்பூர் ஆகிய பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குய்  பயன்படும் வகையில், புதிய வழித் தடங்களில் கூடுதல் பேருந்துகளை இன்று தமிழகப் போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

அதன்பின்  செய்தியாளர்களுக்கு அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக  சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரவுகிறது. அண்டை மா நிலங்களான ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட மா நிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதனால், அந்த மா நிலத்திற்கும், நமது மாநிலத்திற்கும் இடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்பது சட்ட ரீதியாக நடவடிக்கைகளில் ஒன்று எனவே,  அந்த மா நிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.