புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 31 அக்டோபர் 2018 (07:08 IST)

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி பூஜை செய்த ஜோசியர்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரை நிர்வாணமாக்கி பூஜை செய்த காஞ்சிபுரம் ஜோசியர் ஸ்ரீதர் என்பவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே ஓதியூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஜோசியர், மாந்த்ரீகமும் கற்றவர் என்று கூறப்படுவதால் அவரிடம் ஜோசியம் மட்டுமின்றி உடல்நலக்குறைவான பெண்களும் மாந்திரீக வைத்தியம் செய்ய வருவதுண்டு

அந்த வகையில் சமீபத்தில் ஒரு இளம்பெண் தனது உடம்பில் உள்ள தொந்தரவு குறித்து ஸ்ரீதரிடம் கூறி சிகிச்சை பெற வந்தார். இந்த நோய் தீரவேண்டும் என்றால் நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என்று கூறி அந்த பெண்ணை நிர்வாணமாக்கிய ஸ்ரீதர் பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், இதுகுறித்து போலீசிடம் புகார் செய்ய போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். ஜோசியர் ஸ்ரீதர் மீது மேலும் ஒரு பெண் இதேபோன்ற புகாரை அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.