வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (12:54 IST)

அரசுப் பள்ளிகளில் போலியாக தேர்ச்சி வழங்கப்படுகிறது: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

krishnasamy
ஆட்சியாளர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க அரசு பள்ளிகளில் போலியான தேர்ச்சி வழங்கப்படுவதாக புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
மருத்துவ கல்லூரிகள், மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகளில்  தேர்ச்சி அடையும் வகையில் தமிழ்நாடு அரசு பாடத்திட்டம் மாற்றம் செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். 
 
தமிழகத்தில் மாணவர்களுக்கு போலியாக தேர்ச்சி அடைய வைக்கப்படுகிறது என்றும் 40 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி அடைய மாட்டார்கள் என்பதால் தேர்ச்சி விகிதம் அதிகம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு போலியான தேர்ச்சி நடைபெறுகிறது என்றும்  இந்த மோசடிகளால் மாணவர்களின் தரம்  குறைகிறது என்று அவர் குற்றம் காட்டியுள்ளார். 
 
கல்வித்துறையை ஆட்சியாளர்கள் தான் கெடுக்கின்றனர் என்றும்  தேர்வின் போது இவ்வளவு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார் 
 
 தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பெற்றோர்களை ஆட்சியாளர்கள் ஏமாற்றி வருகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran