மக்களே உஷார்: புழகத்தில் போலி 10 ரூபாய் நாணயம்!!
பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள சில்லறை தட்டுப்பாட்டை பயன்படுத்தி, சில இடங்களில் போலி 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வங்கிகளில் கூட்டம் கூட்டமாய் அலைமோதி வருகின்றனர். அவ்வாறு பெறப்படும் நோட்டுக்களுக்கு சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 10 ரூபாய் போலி நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
இந்த போலி நாணயங்களில் உள்ள சிங்க முத்திரை, ஆண்டு, ரூபாய் குறியீடு உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.