புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2017 (19:47 IST)

விஷாலின் தோல்வி அரசியல் ஆசையுள்ள நடிகர்களுக்கு பாடமாக அமையும் - ஈஸ்வரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் டெபாசிட் இழப்பதன் மூலம் இனி நடிகர்கள் தேர்தலில் நிற்க மாட்டார்கள் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 
நடிகர் விஷால் ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்ததை அடுத்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
நடிகர் விஷாலுக்கு பின்னால் ஆளும் கட்சியினர் உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. அதிமுகவினர் மீது மக்கள் வெறுப்பில் உள்ளதால் அவர்களுக்கு எதிரான ஓட்டுகள் திமுகவுக்குதான் விழும். இதை தடுக்கவே நடிகர் விஷாலை தேர்தலில் நிற்க வைத்துள்ளனர். 
 
அவருக்கே தெரியும் டெபாசீட் கூட வாங்க மாட்டோம் என்று. தற்போது விஷால் தேர்தலில் தோல்வி அடைவதன் மூலம் இனி நடிகர்கள் யாரும் தேர்தலில் நிற்க மாட்டார்கள்.