செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By SInoj
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2024 (17:16 IST)

கள்ளக் காதலை கண்டித்த கணவரை கொன்ற மனைவி!

Death
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில்  உள்ள விரார் பாலிவாலி கிராமத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி  கொலை செய்யப்பட்ட ஆண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
 
இதுகுறித்து, போலீசார் நடத்திய விசாரணையில் இம்ரான் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்து இதுபற்றி போலீஸார் விசாரித்து வந்தனர்.
 
இந்த கொலை வழக்கில், நாலாச்சோப்ரா பெல்கார் பகுதியைச் சேர்ந்த பரன் சாவ்  வயது(50) என்பவருக்குத் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். அவரை விசாரித்தபோது, இம்ரானின் மனைவிக்கும் அவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த இம்ரான் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் இருவரும் ஆத்திரமடைந்து இம்ரானை கொலை செய்ய திட்டமிட்டு, இதற்காக, தனது நண்பர்கள் அப்துல் முபாரக் அலி பத்தா ஆகியோரின் உதவியை நாடியுள்ளனர்.
 
பின்னர், சம்பவ தினத்தன்று, இம்ரானை கடத்திச் சென்று, கொலை செய்துவிட்டு, உடலை விராட் பாலிவாலி கிராமத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
 
இந்தக் கொலை நடந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு 3 பேர் பிடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.